மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் சரக்கு ரயில் தடம்புரள்வு

மாகோவில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பிரயாணித்த சரக்கு ரயில் மட்டக்களப்பு புகையிரத நிலைய அண்டிய பகுதியில் இன்று புதன்கிழமை (26) தண்டவாளத்தை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

மாகோவில் இருந்து காலை 6.00 மணிக்கு மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்த சரக்கு ரயில் பகல் 2 மணியளவில் புகையிரத்தில் இருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் தண்டவாளத்தை விட்டு விலகியதையடுத்து ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளன

இதனால் மட்டு புகையிரதத்தில் இருந்து கொழும்புக்கும், கொழும்பில் இருந்து மட்டு புகையிரத நிலையத்துக்கான ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது

இதன்போது கொழும்பு நோக்கி பிரயாணிக்கும் ரயில்கள் ஏறாவூரில் இருந்து புறப்படுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு புகையிரத நிலைய பணிப்பாளர் அ.பேரின்பராஜா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *