கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதுநகர் பகுதியில் பாழடைந்த வீடு ஒன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்றது.
அதனைஅடுத்து இராணுவ புலனாய்வுத் துறையினர் பொலிஸாருக்கு அறிவித்ததற்கு அமைய கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பொலிஸ்மா அதிபரின் கீழ் உருவாக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர் சம்பவ இடத்துக்கு உடனே சென்று மூன்று பார்சல் கஞ்சாவை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


