கூட்டுறவுச் சங்கங்களின் தற்போதைய வரி ஏற்பாடுகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கான பெறுமதி சேர் வரி கணக்குகளினை நிகழ்நிலை முறை மூலம் சமர்ப்பித்தல் தொடர்பான பயிற்சிநெறி இன்று நடைபெற்றது.
கூட்டுறவுச் சங்கங்களின் தற்போதைய வரி ஏற்பாடுகள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிற்கான பெறுமதி சேர் வரி கணக்குகளினை நிகழ்நிலை முறை மூலம் சமர்ப்பித்தல் தொடர்பான பயிற்சிநெறி இன்று(03) நடைபெற்றது.
குறித்த நிகழ்வு வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட செயலக பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் ந. திருலிங்கநாதனின் தலைமையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களை வைத்திருக்கின்ற கூட்டுறவு சங்கங்களிற்கு பெறுமதி சேர் வரி தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.
இதன் வளவாளராக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் சி. தெய்வசீலன் கலந்து கொண்டார்.
இதில் வடக்கு மாகாணத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை வைத்திருக்கின்ற கூட்டுறவு சங்கங்களின் பொதுமுகாமையாளர்கள், கணக்காளர்கள், உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஏ.டி.சி.சி. பஸ்நாயக்க, உதவி ஆணையாளர் எம். சிந்துஜா, கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


