எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் “வடக்கு, கிழக்கு மக்கள் ஆதரவு எமக்கே” என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியை வடக்கு, கிழக்கு மக்களே ஆதரிப்பார்கள்.
பொதுத்தேர்தலின்போது 22 தேர்தல் மாவட்டங்களில் 21 இல் நாம் வெற்றிபெற்றோம்.
பொதுத்தேர்தலின் போது எமக்கு வாக்களிக்காதவர்கள் கூட இம்முறையும் வாக்குகளை வழங்குவார்கள் சிறப்பான அணியை களமிறக்கியுள்ளோம்.
இம்முறை அனைத்து சபைகளுக்கும் போட்டியிடுகின்றோம். இதுகூட ஆரம்பக்கட்ட வெற்றியே எனவும் தெரிவித்தார்.

