உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் ஏற்பாட்டில் பூநகரி நாச்சிக்குடா கடற்கரை சுத்தம் செய்யும் பணி இன்று(04) முன்னெடுக்கப்பட்டது.
உலக சுற்றாடல் தினமானது இவ் வருடம் பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் எனும் கருப்பொருளினை மையமாக கொண்டு மே 30 திகதி முதல் ஜுன் 5 ம் திகதிவரை சுற்றாடல் வாரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அந்தவகையில்
மே 30 ம் திகதி பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம்
மே 31 ம் திகதி வழிமாசடைதல் மற்றும் அதன் பாதகமான தாக்கங்களைக் குறைத்தல்
ஜுன் 1 ம் திகதி சுற்றாடலை தூய்மைப்படுத்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள்
ஜுன் 2ம் திகதி உயிர் பல்வகைமை பாதுகாப்பு
ஜுன் 3 ம் திகதி நீர் மற்றும் நீர் மூலோபாயங்களை பாதுகாத்தல்
ஜுன் 4ம் திகதி கரையோர வலையங்களை தூய்மைப்படுத்தல்
ஜுன் 5 ம் திகதி மரநடுகை மற்றும் உலக சுற்றாடல் தின கொண்டாட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.
கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம் மற்றும் பூநகரி பிரதேச செயலகம், பூநகரி பிரதேச சபை, கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம், கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பங்குபற்றுடன் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டது.


