கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பில் உத்தியோகப்பூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு நேற்று(03) திறந்து வைக்கப்பட்டது.
பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீயசூரயவினால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்குமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெசுந்தரவும் கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் பதில் பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்பட்டார்.
காரைதீவைச் சேர்ந்த பொலிஸ் மேனன் இறுதியாக மட்டக்களப்பு மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரியாக பணியாற்றியவராவார்.
இந்த பிரிவு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டலின் கீழ் இது செயற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

