மாணவர்களுக்கு நிதி சென்றடைகிறதா; கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்  

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இம்முறை கல்விக்காக அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அவை மாணவர்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பாக சென்றடைகின்றதா எனும் கலந்துரையாடல் இன்று(06) பிற்பகல் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

 

இக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் பிராந்தியசுகாதார சேவை அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

 

இது மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 3 பாடசாலைகளில் அண்மையில் உணவு ஒவ்வாமையினால் 70 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி இ. உதயகுமாரின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

 

இதன் போது பாடசாலைகளுக்கு உணவு வழங்குதலில் பிளாஸ்டிக் முற்றாக தடைசெய்யப் பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு அண்டிய பகுதிகளில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்.

 

உணவு தயாரித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் பாடசாலைகளுக்கு வழங்க முன் அதனை பாடசாலை உணவுக் குழு கண்காணிக்க வேண்டும் எனவும் இதனை பொதுச் சுகாதார பரிசோதர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஒருவர் ஒரு பாடசாலைக்கு மாத்திரமே உணவு வழங்குதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதுடன் 200 மாணவர்களுக்கு மாத்திரமே அவை வழங்க வேண்டும் எனவும் இந்தக் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

 

இக் கலந்துரையாடலில் மட்டு வலய கல்வி பணிப்பாளர் திருமதி. ஷாமினி ரவிக்குமார், பொது சுகாதார வைத்திய அதிகாரிகள், மட்டு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் உணவு வழங்குனர்கள், கல்வித் திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் சுகாதார சேவை திணைக்கள உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *