அனைத்து முஸ்லிம்களுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள் – ஆதம்பாவா எம்.பி.

தியாகத்தின் அருமை, இறைநம்பிக்கையின் மகத்துவம், மனித நேயத்தின் மீதான ஆழ்ந்தபற்றுதல் ஆகியவற்றை நினைவுபடுத்தும் இப்புனித நாளில், அனைத்து முஸ்லிம்களுக்கும் என் அன்பான ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகள் என அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

 

அனைத்து முஸ்லிம்களும் இந்தப் புனித ஹஜ்ஜுப் பெருநாளை சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என வல்ல இறைவனிடம் தான் இருகரமேந்திப் பிரார்த்திப்பதாகவும் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் நிரம்பிய நல் வாழ்க்கைக்காக நம்மை ஒட்டுமொத்த சமூகமாக மாற்றுவதற்கு இறைநம்பிக்கையின் மகத்துவம், மனித நேயத்தின் மீதான ஆழ்ந்தபற்றுதல் என்பன சிறந்ததொரு வாய்ப்பாக அமையும் எனவும் அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *