திருக்கோவிலில் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பலன் தரும் மரக்கன்றுகள் நடுகை நிகழ்வு

உலக சுற்றாடல் தின நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் தலைமையில் விநாயகபுரம் மின்னொளி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

 

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உலக சுற்றாடல் தினத்தை  முன்னிட்டு திருக்கோவில் பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பலன் தரும் மரக்கன்றுகள் நடுகை நிகழ்வும் இடம்பெற்றது.

 

இந் நிகழ்வில் பொலித்தின் பிளாஸ்ரிக் பாவனைகளை கட்டுப்படுத்தல் பற்றி விழிப்புணர்வும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு, சுற்றாடல் தினம் பற்றிய உரைகளும் இடம்பெற்றன.

 

இந் நிகழ்வில் திருக்கோவில் விநாயகபுரம் சிவன் ஆலய பிரதம குரு, பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவையாளர்களுக்கான நிர்வாக உத்தியோத்தர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், கிராம அபிவிருத்தி உத்தியோத்தர்கள், திருக்கோவில் பொலிஸ்நிலைய உத்தியோத்தர், விளையாட்டுகழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *