கிளிநொச்சி சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கனர டிப்பர் வாகனங்கள் வீதி போக்குவரத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
ஏ9 வீதியில் மணல் கொண்டு செல்வதற்கு வீதி தடை அனுமதிபத்திரம் அற்ற டிப்பர் வாகனங்கள் சட்டவிரோதமாக அனுமதிக்கப்படாத இடத்தில் மணல் அகழ்வுகள் மேற்கொண்டு சட்டவிரோத அனுமதிபத்திரங்கள் தயாரித்து மணல் ஏற்றி சென்றபோது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறு பல தரப்பட்ட குற்றத்துக்காக சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட டிப்பர் வாகனங்களை வீதி போக்குவரத்து பொலிஸார், விசேட குற்ற தடுப்பு பொலிஸாரும் இணைந்து மடக்கி பிடித்தனர்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

