அஞ்சல் மூல வாக்களிப்பதற்கான திகதிகள் அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23, 24 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் மாதம் (28) மற்றும் (29) ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என குறிப்பிட்டார்.
இதேவேளை மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்த, கண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே மாதம் (06)ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த மூன்று பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பு மனு கையளிப்பு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *