கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக நேற்று(08) கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவையாறு பகுதியில் நேற்று நள்ளிரவு 11.20 மணியளவில் வீட்டு வளாகத்தில் சூட்சுமமான முறையில் கைவிடப்பட்ட சாக்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 31 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரை இன்று(09) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

