வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று(09) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் பாற்செம்பு பரவ காவடி தீச்சட்டி பாதயாத்திரை ஆகிய பல்வேறு வகையான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.
ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருவதுடன் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத்தினைக்களத்தினர் தமது சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


