புதூரில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கான வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

மட்டக்களப்பு மாநகர சபை பகுதிக்கு உட்பட்ட புதூர் நகரத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கான வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு விட்டுத் திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ரி. சுபாஸ்கரன் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த கால அரசாங்கத்தினால் நிறுத்தப்பட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டத்திக்கான நிதிகள் புதிய அரசாங்கத்தினால் தற்போது கட்டங்கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றன.

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்திற்கான நிதிகளும் கிடைக்கப்பெற்றவுடன் அவற்றிற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

எமது அமைச்சின் அமைச்சர் விரைவில் மாவட்டத்திற்கு விஜயம் செய்ய உள்ளதால் இங்குள்ள வீடமைப்பு தொடர்பான சகல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும்.

உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 60 பயனாளிகளுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *