பொதுத்துறையில் உருமாற்றல் தொடர்பான பயிற்சி பாசறை

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பொதுத்துறையில் பணிப்பாய்ச்சலை  உருமாற்றுதல், செயற்கை நுண்ணறிவு, கைபேசி செயலி ஒருங்கமைப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி பாசறை பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (27) இடம் பெற்றது.

அரச சேவைகளின் போது  செயற்கை நுண்ணறிவுகளை பயன்படுத்தி  வினைத்திறனான சேவை வழங்குவதற்கு தேவையான ஆலோசனைகள் இதன் போது வழங்கப்பட்டது.

மேலும் எமது நாட்டின் பொதுத்துறையில் எவ்வாறான நுண்ணறிவுகளை பயன்படுத்துவது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டது.

இடர் முகாமைத்துவம், வாகன நெரிசல் கண்காணிப்பு முகாமைத்துவம், நோய் இனங்காணல், ஆட்களை இனங்காணல் போன்ற பலவிடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *