மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக சிவம் பாக்கியநாதன் தெரிவு

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக சிவம் பாக்கியநாதன் தெரிவாகியுள்ளார்.

மட்டு மாநகர சபை மேயர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு. அஸ்மி தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் இன்று(11) காலை 08.40 மணிக்கு இடம்பெற்றது.
அதன்படி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த சிவம் பாக்கியநாதனை அதே கட்சியைச் சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரெத்தினராசா ரகுபரன் வழிமொழிய வேறு தெரிவுகள் இன்மையால் அவர் ஏகமனதாக மட்டு மாநகரசபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *