மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்திற்கான இணைப்பாளர்களை தெரிவு செய்யும் விசேட கூட்டம் மட்டக்களப்பில் இடம் பெற்றது.
சமூக மேம்பாட்டு மையத்தின் செயற்பாடுகளை மாவட்டம் முழுவதும் இலகுவாக முன்னெடுக்கும் நோக்கில் பிரதேச செயலக ரீதியாக இணைப்பாளர்களை தெரிவு செய்யும் விசேட கூட்டம் (29)ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் இடம் பெற்றது.
இதன் போது 10 வருடத்திற்கு மேல் மாவட்ட சமாதான நீதிவான்களாக கடமையாற்றும் நீதிவான்களுக்கு முழு தீவிற்குமான சமாதான நீதிவான் நியமனத்தை சங்கத்தின் ஊடாக பெற்றுக்கொடுத்தல், சமூக நலத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாகவும் தலைவர், நிருவாக சபை உறுப்பினர்களால் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று தெற்கு (கிரான்), ஏறாவூர்ப்பற்று (செங்கலடி), ஏறாவூர்நகர் (ஏறாவூர்) ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிற்கான இணைப்பாளர் தெரிவு ஏற்கனவே இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

