வெகுசன ஊடக அமைச்சினால் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் செயற்திட்டத்தின் அனுசரனையின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு நடைபெற்றன.
இச் செயலமர்வின் வளவாளர்களாக உணவு மருந்து பரிசோதகர் சுப்பிரமணியம் சுதர்சன், கலாநிதி ஶ்ரீ பிரிந்தன் மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது உணவுப் பாதுகாப்பு தொடர்பான சட்டதிட்டங்கள், உணவுப்பாதுகாப்பு தொடர்பான சமூக ரீதியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் இதன் போது தெளிவூட்டப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளிஸ்வரன், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அதிகாரி யூடி தீபன் பெரேரா, டினா ஜயரத்னம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தகவல் அதிகாரி வி. ஜீவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


