இறக்காமம் மதீனா விளையாட்டுக் கழகம் நடாத்திய மதீனா சலன்ச் சம்பியன் ட்ரோபி கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகம் மற்றும் இறக்காமம் மதீனா விளையாட்டுக் கழகம் என்பன தெரிவு செய்யட்டன.
சம்பியனாக அட்டாளைச்சேனை அல்-நஜா விளையாட்டுக் கழகம் மகுடம் சூட்டிக்கொண்டதுடன்
(வெற்றிக்கிண்ணம் மற்றும் 30,000 ரூபாய்ப் பணப்பரிசு) பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் இறுதிப்போட்டிக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரஃப் தாஹிர் பங்கேற்றதுடன் வெற்றிக்கிண்ணம் காசோலைகளையும் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக எமது அணியின் தலைவர் ஜி. பஹாத் தெரிவு செய்யப்பட்டார்.


