ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில் 43,962 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

2025 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில் 43,962 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 12,362 ஆகும்.

அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 3,740 சுற்றுலாப் பயணிகளும், பங்களாதேஷிலிருந்து 2,717 சுற்றுலாப் பயணிகளும்,  ஜெர்மனியிலிருந்து 2,439 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 2,403  சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 2,169 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 10 இலட்சத்து 73 ஆயிரத்து 765 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *