நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியைச் சேர்த்த பத்மநாதன் மயூரன் ஏக மனதாக தெரிவாகியுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிக்கான கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்று(13) மதியம் நடைபெற்றது.
தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் ப. மயூரன் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், வேறு யாரும் போட்டியிடாதமையால் மயூரன் தவிசாளராக ஏக மனதாக தெரிவானர். உப தவிசாளராக ஜெயகரன் தெரிவாகியுள்ளார்.
அதேவேளை, ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் தவிசாளர் தெரிவில் சபையில் இருக்கவில்லை என சபையில் இருந்து வெளியேறியிருந்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியும், தமிழரசுக் கட்சியும் நல்லூர் பிரதேச சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிணை மேற்கொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

