அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் மின்சாரம் தடைப்பட்டமை தொடர்பில் தகவலை வெளிபடுத்திய ஊடகவியலாளர்கள் மீது “நான் அப்ப கோப்பை அல்ல” என பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்த சம்பவம் நேற்றய தினம் மாலை பதிவானது .
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த கூட்டத்தில் உரையாற்றிய வலு சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தங்கு தடையின்றி 24 மணிநேர மின்சாரத்தை வழங்குவது எமது நோக்கமாக உள்ளது என தெரிவித்தார்.
இந்நிலையில் அவர் உரையாற்றி சில நிமிடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் தகவலை வெளியிட்ட போது ஊடகவியலாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு விரைந்த இளங்குமரன் எம்.பி “நான் அப்ப கோப்பை அல்ல அனைவரும் இணைந்து மின் ஆழியை நிறுத்தினால் மின்சாரம் இல்லாது போகும்” என தெரிவித்து சென்றார்.

