மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி

மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2025ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி இன்று(14) நடைபெற்றது.

 

இந் நிகழ்வானது இல்லத்தின் தலைவரும் கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பதில் பணிப்பாளரும் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளருமான சரவணபவன் மோகனபவன் தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர்  நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டிருந்தார்.

 

சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண நன்நடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள ஆணையாளர் சுஜீவா சிவதாஸ், கரைச்சி கோட்டக்கல்விப்பணிப்பாளர் சுப்பிரமணியம் தர்மரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டதுடன்; கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் ருபன்பிரசாந் தர்மதாஸ, கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை அதிபர் திரு. தெய்வேந்திரம் சசிரங்கன், மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மூத்த ஆலோசகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், இல்ல முகாமைத்துவ குழு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *