முல்லைத்தீவு மாவட்டம் மாஞ்சோலை பொது வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள கடைத்தொகுதியில் இன்று காலை(16) தீபு பரவல் ஏற்பட்டு கடைகள் எரிந்தன.
காற்றின் வேகத்தினால் தீப்பரவல் மிக வேகமாக அதிகரித்துள்ளது.
தீச் சுவாலைகள் நீண்ட தூரம் காற்றினால் வீசக்கூடும் மிக மிக மக்கள் அவதானமாக இருக்கவும் என மாவட்டசெயலகத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்புப் படைப் பிரிவு இல்லாமையினால் உடனடி நடவடிக்கையாக படையினரின் உதவியை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு நாடியுள்ளது.
தீப் பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும்குறிப்பிடத்தக்கது.

