ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானம்

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.

குறித்த வேலைநிறுத்தமானது தொடருந்து ஓட்டுநர்களின் தொழில்முறை உரிமைகள் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான பல பிரச்சினைகள் காரணமாகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், தொடருந்து ஓட்டுநர்கள் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு போன்றவற்றை சமாளிப்பதற்கு சம்பள உயர்வை கோருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *