பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூநகரி குடமுருட்டி ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வுக்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைவாக இப்பகுதியில் இருந்து சட்டவிரோத மணல் அகழ்வுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் இப்பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் இன்று(18) நான்கு டிப்பர்கள் மணல் அகழ்வில் ஈடுபடுவதாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி விசேட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக நான்கு டிப்பர்களும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயபுரம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிக்கொண்டு செல்ல முற்பட்ட பாலை மர குற்றிகளுடன் பயணித்த கப்ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறி முதல் செய்யப்பட்ட கப்ரக வாகனம், நான்கு டிப்பர்கள் மற்றும் சந்தேக நபர்களை பூநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

