யாழ் மானிப்பாயில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கந்தமுத்து புஸ்பராசா எனும் 80 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் நான்கு நாட்களுக்கு முன்னரே உயிரிழந்துள்ளார்.
இதனை யாரும் அவதானிக்காத நிலையில் துர்நாற்றம் வீசியது. இந்நிலையில் மானிப்பாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதனை அடுத்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

