தர்மபுரத்தில் சட்டவிரோத மரக் கடத்தல் முறியடிப்பு

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனார் மயில்வானபுரம் அரச காட்டுப்பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் பெறுமதி மிக்க பன்னிரண்டு நாவல் மரக் குற்றிகளை ஏற்றிப் பயணித்த கப் ரக வாகனத்தை தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக விசுவமடு பகுதியில் வீதி சோதனையின் மூலம் நேற்று(18) இரவு 7.30  மணி அளவில் மரக் குற்றிகளை ஏற்றி பயணித்த கப்ரக வாகனம் மற்றும் அதன் சாரதியையும் தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *