யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் மாவட்ட செயலாளராக இதுவரை கடமையாற்றிய மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மருதலிங்கம் பிரதீபனுக்கான நியமனக் கடிதம் இன்று(20) அமைச்சரவை செயலாளர் டபிள்யூ எம்.டி.ஜே. பெர்னாண்டோவினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் செயலாளராக கடமையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *