கண்டாவளையில் 70 வருடங்களின் பின்னர் தேசிய மக்கள் சக்தியினரால் வீதி புனரமைப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் ஏழாம் யூனிட் பகுதியில் அமைந்துள்ள வீதி கடந்த 70 வருடங்களுக்கு மேலாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இதன் காரணமாக இவ்வீதியை 35 மில்லியன் ரூபா செலவில் நிரந்தர தார் வீதியாக அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று(21) சம்பிரதாயப்பூர்வமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளரர் மோகன், வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினர், கண்டாவலைப் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *