விசுவமடு பகுதியில் காட்டுத்தடிகளுடன் ஒருவர் கைது

விசுவமடு பகுதியில் இருந்து கப்ரக வாகனத்தில் காட்டுத் தடிகளை அனுமதியின்றி வெட்டி கப்ரக வாகனத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதி சோதனையின் மூலம் நேற்று(20) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று(21) கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பொழுது தமது குற்றத்தினை ஒப்புக்கொண்டதற்கமைவாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *