கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு 

கிளிநொச்சி 155ம் கட்டைப்பகுதியில் நேற்றிரவு(21) இடம்பெற்ற வாகன விபத்தில் 33வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
கிளிநொச்சி 155ம் கட்டைப்பகுதியில் நேற்றிரவு எரிவாயு சிலிண்டர் ஏற்றிய வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்து ஏற்பட்டது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளிலில் இருவர் பயணித்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் கிளிநொச்சி விநாயகபுரத்தைச்சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *