வலி வடக்கில் காணிகளை விடுவிக்கக் கோரிய போராட்டம் இரண்டாம் நாளாகவும் முன்னெடுப்பு

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிய போராட்டம் இன்றும்(22) இரண்டாம் நாளாகவும் அமைதி வழியில் கண்ணீர் மல்க முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காணிகளை விடுவிக்கக் கோரி நேற்று(21) மயிலிட்டி சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் இன்று 500ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு உணவு சமைத்து அவ்விடத்தை விட்டு நகராமல் அமைதி வழியில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இன்று(22) ஞாயிறு விடுமுறை என்பதால் பாடசாலை சிறுவர்கள் தமது நிலங்களிலே மூன்றாம் தலைமுறையாக உரிமை கேட்டு பெற்றோருடன் பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் மயிலிட்டி, பலாலி, அந்ரனிபுரம், காங்கேசன்துறை உள்ளிட்ட காணிகளை சேர்ந்த வயோதிபர்கள் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் கலந்து கொண்டு தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *