மட்டக்களப்பில் மனித வள மேம்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் யோகா தின நிகழ்வுகள்

சர்வதேச யோகா தினத்தினை சிறப்பிக்கும் பொருட்டு ராமகிருஸ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் விவேகானந்தா மனித வள மேம்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் இடம்பெற்றது.

ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு கிளையின் பொது முகாமையாளர் சுவாமி நீல மாதவானந்தஜீ மஹராஜ் தலைமையில் ராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்புக் கிளையின் உதவிப்பொது முகாமையாளர் சுவாமி உமாதீஷானந்தஜீ மஹராஜ் ஏற்பாட்டில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு விசேட அதிதியாக ஊவாவெல்லஸ பல்கலைக்கழகத்தின் நூலகர் கலாநிதி ரீ. பிரதீபனும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் உளநல மருத்துவர் வைத்தியர் சீ. வாமதேவன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரும் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் குருகுல பழைய மாணவர் சங்க தலைவருமாகிய கே. மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது யோகா கண் காட்சி நிகழ்த்தப்பட்டதுடன், ஐயுவைஎஃப் ஆசிய சம்பியன்சிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *