மட்டு – காவத்தமுனையில் யானையின் தாக்குதலுக்குள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை திருமண மண்டப வீதியில், நேற்று(22) யானையின் தாக்குதலுக்குள்ளான நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யானையின் தாக்குதலுக்கு உள்ளான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதுடன், பொதுமக்கள் இரவு நேரங்களில் தங்களது அவசரத் தேவை கருதி வெளிச்செல்ல முடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து காட்டு யானைகள் குடியிருப்புக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *