களுதாவளை ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனி உத்தர மஹோட்சவம் ஆரம்பம்

கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வங்கக் கடலோரம் ஆறுகளும் மரங்களும் வயல் வெளிகளும் சூழ் அழகிய கிராமமாம் தம்பிலுவில் கிராமத்தில் ஆற்றங்கரையோரம் கிராம எல்லையில் தனிக்கோவில் கொண்டு வீற்றிருந்து நாடிவரும் தேடிவரும் அடியவர்களுக்கு அருள் வழங்கும் வள்ளல் நாயகனாம் தம்பிலுவில் களுதாவளை ஸ்ரீ சிவலிங்க பிள்ளையார் ஆலய வருடாந்த ஆணி உத்தர மஹோற்சவ கொடியோற்ற திருவிழா நேற்று(23)பஞ்ச பூதங்களின் ஆசிர்வாதத்துடன் மேளதாளங்கள் முழங்க விண்ணைப்பிளக்கும் பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் ஆரம்பமாகியது.

 

15து நாட்கள் திருவிழா கோலம் பூண்டு அடுத்த மாதம் 01 ஆம் திகதி வீதி உலா இடம்பெற்று 02 ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

 

ஆலய பூசை நிகழ்வுகள் யாவும் உட்சவ கால பிரதம குரு கலா பூசனம் சைவப்புலவர், சைவ சித்தாண்ட பண்டிதர் சோதிடர் சிவஸ்ரீ லோகநாதன் குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.

 

அத்துடன் ஆலய நிகழ்வுகள் யாவும் ஆலய தலைவர் .பவாநந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *