கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்வள அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்வள அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்  சந்திரசேகர் மற்றும் கடற்றொழில் பிரதியமைச்சர் ரத்ன கமகே தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

 

தற்போதைய அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட “வளரும் தேசம் ஒரு அழகான வாழ்க்கை” கொள்கை பிரகடனத்திற்கமைய  ‘நிலையான மேலாண்மை – தரமான மீன் வளம்’ என்ற கொள்கை கட்டமைப்பு, ஊடாக முறையான அறிவியல் முறைகள், நடைமுறை உத்திகள் மூலம் மீன்பிடித் தொழிலை நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மேம்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி இதன் மூலம் அதிக மீன் பொருட்களை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு நியாயமான விலையில் வழங்குதல் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டது.

 

இதில் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் முரளிதரன், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

தொடர்ந்து கடற்றொழில் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

 

 

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்கள் மீன் பிடித்துறைக்கு  முன்னுரிமை அளிக்கின்ற மாவட்டங்கள் மன்னார் மாவட்டம் நூற்றுக்கு நாற்பது வீதம் மீன் பிடி தொழிலையே பிரதானமாகக்கொண்டுள்ளனர்.

 

 

கடந்த காலத்தில் கடடற்றொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை கடற்றொழிலாளர்களை பகடைக்காய்களாக மாத்திரமே பயன்படுத்தினர்.நிரந்தர ஓய்வூதியம் கூட பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

 

 

சட்டவிரோத கடற்தொழிலை தடுத்தல் அதில் ஈடுபடும் மீனவர்களை தெளிவூட்ட வேண்டும்.

 

 

இந்திய மீனவர்களின் வருகையையும் இதன் ஊடாக தெளிவு படுத்த வேண்டியுள்ளது. இந்தியாவுக்கும் எடுத்து சொல்ல வேண்டியுள்ளது.

 

 

எதிர்வரும் ஜீலை மாதத்திலிருந்து மீனவர்களின் பங்களிப்புக்கு ஏற்ப ஓய்வூதியத்தையும் அதிகரிக்கவுள்ளோம்.

 

 

மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தையும் அதிகரிக்க பெண்கள் அமைப்புக்களுக்கு ஊக்குவிக்கவுள்ளோம். கூட்டுறவு சங்கங்களையும் பலப்படுத்தவுள்ளோம்.

 

 

யாழ்ப்பாணம் வரும் மனித உரிமை ஆணையாளரை வரவேற்கின்றோம். உலகில் எங்கேயாவது மனித உரிமை மீறப்பட்டிருந்தால் அது தடுக்கப்படவேண்டும்.

 

 

மனித உரிமை மீறலில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

 

 

உலகத்தில் இன்று மனித உரிமையை மீறுகின்றவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் சொல்லுகின்றோம்.

 

 

மக்களுக்கு யுத்தம் முடிந்து 17வருடங்கள் ஆகின்றது. நாங்கள் சொல்கின்றோம் இனியும் இப்படியான யுத்தம் ஏற்படக்கூடாது. இனிமேலும் இசைப்பிரியாக்கள், கிருசாந்திகள், கோணேஸ்வரிகள் உருவாகக்கூடாது.

 

 

மனித உரிமை மீறல்கள் என்பது வடக்கில் மாத்திரம் இல்லை. தமிழ் இளைஞர்களுக்கு மாத்திரம் அல்ல. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்களும் இதே விதத்தில் அடித்து நொருக்கி ஆறுகளில் பிணங்கள் மிதந்த வரலாறு உள்ளது.

 

 

இந்த விடயத்தை மீள மீள பேசி எங்களுடைய உறவை பிரிக்கின்ற நடவடிக்கையா எங்களுக்கு தேவை. ஆனால் நாங்கள் சொல்கின்றோம் செம்மணியில் புதையுண்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும்.

 

 

இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் உருவாகாத சமூதாயத்தை உருவாக்க வேண்டும். அதனையே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *