செம்மணி மனிதப் புதைகுழியில் அணையா விளக்குப் போராட்டம்; எம்.பி சாணக்கியன் பங்கேற்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் சர்வதேச விசாரணை கோரி மக்கள் செயல் தன்னார்வ இளைஞர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட அணையா விளக்குப் போராட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்வானது இன்று(25) காலை 10.00 அளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

அதைத் தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெற்றதுடன் கவனயீர்ப்புப் பேரணியும் இடம்பெற்றது.

இப்போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் தமிழர் தேசமாக ஒன்றிணைந்து சர்வதேச விசாரணையை வலுப்படுத்த அனைவரும் இணைந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது கையெழுத்துப் போராட்டமும் இடம்பெற்றது.

இவ் கவனயீர்ப்புப் பேரணியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *