செம்மணியில் அணையா விளக்குப் போராட்டம்; எம்.பி ரவிகரன் பங்கேற்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, சர்வதேச கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தி அணையா விளக்குப் போராட்டம் இடம்பெற்று வருகிறது. 1996 இல் கொல்லப்பட்ட கிருசாந்தியின் உறவினரால் சுடரேற்றப்பட்டு இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் சட்டத்தரணி வைஸ்ணவி சண்முகநாதன் தலைமையில் இந்த போராட்டம் இடம்பெற்றது.

இம் மூன்றாம் நாள் போராட்டத்தில் பங்கேற்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மலர்தூவி தனது அஞ்சலிகளைச் செலுத்தியதுடன், அங்கு இடம்பெறும் கையெழுத்திடும் நடவடிக்கையிலும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *