இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்குக் கிழக்குத் திரு மாவட்ட அவையின் 62 ஆவது கூட்டத் தொடர் கோமாரி திருச்சபையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வடக்கு கிழக்குத் திரு மாவட்ட அவைத் தலைவர் அருட்திரு. ஏ. எஸ். சாம் சுபேந்திரன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் பேராயர் அருட்பணி கிங்சிலி வீரசிங்க கலந்து கொண்டார்.
சிறுவர்களை ஒழுக்கமுள்ள சமுதாயமாக கட்டியெழுப்ப வேண்டும் என்ற தூர நோக்கோடு ஞாயிறு பாடசாலை கல்வி, கிறிஸ்தவ விழுமியங்களை வளர்ப்பதற்கான அடித்தளம் எனும் தொனிப்பொருளில் நிகழ்வுகள் யாவும் நடைபெற்றது.
தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் திருச்சபையின் ஆண்மீக நிலை, திருப்பணிகள் நிர்வாக விடயம் சம்பந்தமாகவும் அடுத்த ஆண்டுக்கான திட்டத்தில் திருச்சபை வளர்ச்சிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத் தொடரில் வடக்குக் கிழக்கு பகுதிகளில் இருந்து அருட்பணியாளர்களும் பொதுஅவையினரும் ஒன்று கூடி கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.
இக் கூட்டத்திற்கான சகல ஏற்பாடுகளையும் வடக்கு கிழக்குத் திருமாவட்ட அவை செயலாளர் அருகலாநிதி கே. எஸ். நிசாந்தன் ஏற்பாடு செய்திருந்தார். அவர் இவ் நிகழ்வில் மண்ணின் மைந்தன் என பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

