சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் 10 வது ஆண்டு நிறைவு; மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் 10 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்று(26) மட்டக்களப்பு கல்லடி சரவணா வீதியில் இருந்து பி.ப 2.00 மணிக்கு ஆரம்பிக்கும் விழிப்புணர்வு பேரணியானது, மட்டக்களப்பு நகர் வரை செல்லவுள்ளது.

 

குறித்த விழிப்புணர்வு பேரணியில், இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர், முக்கியஸ்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

இந்நிகழ்வினை இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையம் ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *