யாழ்ப்பாண மாநகர சபையின் இன்றைய முதல்நாள் குழு அமர்வில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
சபையில் மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கு உறுப்பினர்கள் முயற்சித்த போது அதனை மாநகர முதல்வர் ஏற்றுக்கொள்ளவில்லை என மாநகர சபையின் உறுப்பினர் தர்ஷானந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் உறுப்பினர்கள் பலரும் எழுந்து தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பத்தை கோரினர்.
எனினும், இந்தக் கோரிக்கைகளை எழுத்தில் வழங்குமாறு கூறிய முதல்வர் அங்கிருந்து எழுந்து சென்றதாக மாநகர சபை உறுப்பினர் தர்ஷானந்த் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர முதல்வரை தொடர்புக் கொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.

