இலங்கைத்துறை முகத்துவாரத்தில் சிறிய ரக லொறி விபத்து; சாரதி படுகாயம்

திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியில் சிறிய ரக லொறி இன்று(29) காலை விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

தோப்பூரில் இருந்து வெருகல் நோக்கி சிறிய ரக லொறியில் வியாபாரத்திற்காக பொருட்களை ஏற்றிச் சென்ற போது சிறிய ரக லொறி இலங்கைத்துறை முகத்துவாரம் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் சிறிய ரக லொறி சாரதியான தோப்பூரைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *