செம்மணியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீலநிற துணி கைப்பை அடையாளம்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய(29) அகழ்வின்போது மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் என்புத் தொகுதி ஒன்றிற்கு அருகில் ஆடை, சிறிய கண்ணாடி வளையல்கள், ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீலநிற துணி கைப்பை ஒன்றும் அடையாளம் காணப்பட்டது.

 

குறித்த துணி கைப்பையை ஒத்த புத்தக கைப்பைகள் முன்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களால் நிவாரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

 

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை மொத்தமாக 33 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *