கிளிநொச்சியில் 79 கிலோ 245 கிராம் கேரள கஞ்சா மீட்பு; பெண் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று(30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

 

79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவினை இவ்வாறு தர்மபுரம் பொலிஸார் மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளரான 55வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரான விசுவமடு கொழுந்துப்புலவு பகுதியை சேர்ந்தவர் 55 வயதுடைய பெண்ணையும் மற்றும் தடையப் பொருட்களையும் இன்று(01) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதி மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.எஸ்.ஜே. திஸ்ஷநாயக்க தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *