வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது

வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

வவுனியா, கற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்தவர்கள் வெளியில் சென்ற சமயம் பட்டப்பகலில் வீடு புகுந்து சிலிண்டர், லப்டொப், ரப், கைத் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி போன்ற பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளது.

 

அதில் தொலைபேசி, லப்டொப் என்பன தேக்கவத்தை விளையாட்டு மைதானத்திலிருந்த போது அப்பகுதியூடாக சென்றவர்கள் அதனை எடுத்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

 

இதனையடுத்து வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரிளுடன் பொலிஸ் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

 

அத்துடன் குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களும் பொலிஸால் முறைப்பாடு செய்தனர்.

 

இதனையடுத்து, 32,28 மற்றும் 21 வயதுடைய மூன்று பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

 

மேலதிக விசாரணைகளின் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *