சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் தினம்; விழிப்புணர்வு செயலமர்வு

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகமானது விழிப்புணர்வு செயலமர்வு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் க. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விழிப்புணர்வு செயலமர்வானது யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுகளில் கடமையாற்றும் உயர்பொலிஸ் அதிகாரிகளுக்காக நாளை(02) மு.ப 09.00 முதல் 12.30 வரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடாத்தப்படவுள்ளது.

இந்த விழிப்புணர்வு செயலமர்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதான வளவளராக கலந்துகொண்டு கருத்துரை வழங்கவுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *