இந்துமா சமுத்திரத்தின் முத்தெனத் திகழும் இலங்காபுரியில் கிழக்கு மகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் வங்கடலோரம் வயல் வெளிகள் மா பலா வாழை நீர்நிலைகள் சூழ எழில் அழகு கொஞ்சும் கிராமமாம் தம்பிலுவில் கிராமத்தில் பெரிய களப்பின்னோரம் கிராம எல்லையில் தனிக்கோவில் கொண்டு ஆட்சி புரியும் தம்பிலுவில் களுதாவளை ஸ்ரீ சிவலீங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த ஆனிஉத்தர அலங்கார மஹோற்சவமானது கடந்த மாதம் 23ஆம் திகதி பஞ்ச பூதங்களின் ஆசிர்வாதத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க விண்ணை பிளக்கும் அளவிலான மக்களில் அரோகரா கோஷங்களுடன் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 10 நாட்கள் திருவிழாக்கோலம் பூண்டு நேற்று கிராம வீதிஉலாவும் இன்று சமுத்திர தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.
இத் திருவிழா பூசை நிகழ்வுகள் யாவும் உற்சவ கால பிரதம குரு கலா பூசனம் சைவப்புலவர், சைவ சித்தாண்ட பண்டிதர் சோதிடர் சிவஸ்ரீ. லோகநாதன் குருக்கள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் ஆலய நிகழ்வுகள் யாவும் ஆலய தலைவர் பவாநந்தன் மற்றும் செயலாளர் திரு. சதீஷ் தலைமையில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


