நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள், இன்று(02) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.
இத்தெரிவின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அஸ்பர் தவிசாளராகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் இர்பான் உப தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
நிந்தவூர் பிரதேச சபையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது 06 உறுப்பினர்களைக் கொண்டிருந்த நிலையில், 04 உறுப்பினர்களை மாத்திரம் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான அஸ்பருக்கு தவிசாளர் ஆசை காட்டி, அவரை கையக்கப்படுத்தி, அவரை தவிசாளராக்கி தங்களின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது.

