விவசாயிகளிடத்தே நெற்ச்செய்கையில் நவீன தொழில்நுட்பத்தை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வடமாகாண விவசாயத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்ற வயல் அறுவடை விழா கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இன்று நடைபெற்றது.
நெல் விதைப்பு நவீன முறையான பரசூட் முறையில் விதைக்கப்பட்ட ஏரி 307 என்ற வெள்ளை நெல் அறுவடை விழா நடைபெற்றது.
பாடவிதான உத்தியோகத்தர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண மேலதிக விவசாயப்பணிப்பாளர் தட்சணாமூர்த்தி யோகேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட விவசாயப்பணிப்பாளர் சோதிலட்சுமி, பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

